விழிகள் மூடி வழிகள் தேடி..
கரும்இரவு ஆழ் கடல் பால் வண்ணத்திரை.. தொலைதூரம் தெரியும் என்னில் அடங்க நட்சத்திரம்.. மோதிர நிலவு வெள்ளியின் அருகில் மை போல் மின்ன.. நட்சத்திர ஒளியில் பூக்கள் போல் பூத்திருக்கும் ஆழ்கடல் மீன்கள்.. மிதவை தொனி ஊஞ்சல் ஆட்டுது பேனி... உரசலில் வழி நெடுகிலும் தங்கச் சிதறல்களை சிதரிச் செல்லும - தொனி... தொலைதூரத்தில் காற்றிருக்கும் கலங்கரை தேடி; அதனை துரத்தும் வழிநெடுகிலும் பரந்த கடற் புல்வெளி பவளப் பாறைகள் கடந்து செல்லும்... கடற்கரை ஒளிரும்.. அலைகள் துரத்தும் காற்று அச்சமூட்டும் பாறைகள் மறைந்திருக்கும் கண்கள் நித்திரை தேடும் சிமிட்டும் விழித்திரை பெரிதாகும் ஒளிரும் கனத்தில் நட்சத்திரம் வழி காட்டும்.. கரை வந்து சேரும்.. - வே. திருமுருகன்.